Latestஉலகம்

கேரளாவில் கோர விபத்து: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாப பலி

திருச்சூர், செப்டம்பர்-6,கேரளா, திருச்சூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

​திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு இந்த விபத்து நிகழ்ந்தது.

திண்டுக்கல் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 8 பேர், காரில் குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

​அப்போது, சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வந்த பகுதியில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் பலமாக மோதியது.

இதில் காரில் பயணித்த 8 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நசுங்கிய காரை வெட்டி எடுத்து உடல்களைக் கைப்பற்றினர்.

படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட எட்டாவது மாணவரும் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

​தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வேளையில், விபத்தில் உயிரிழக்கும் முன், நண்பர்கள் 8 பேரும் மகிழ்ச்சியாகக் காருக்குள் எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி, பார்ப்போரை கலங்க வைக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!