Latestமலேசியா

கடிகாரக் கடையில் கொள்ளை: கோடாரியுடன் புகுந்த நபர் உட்பட இருவர் 7 நாட்களுக்குத் தடுத்து வைப்பு

ஜார்ஜ்டவுன், செப்-22-பினாங்கு, Jalan Ansonனில் கோடாரியுடன் கடிகாரக் கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றது தொடர்பில் இரு நண்பர்கள் விசாரணைக்கு உதவ ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 42 மற்றும் 43 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டம் பிரிவு 394-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் கடிகாரம் பழுதுபார்க்கும் கடைக்கு காரில் வந்த சந்தேக நபர்களில் ஒருவர், கோடாரியுடன் கடைக்குள் நுழைந்து பணத்தை ஒப்படைக்குமாறு உரிமையாளரின் மனைவியை மிரட்டியுள்ளார்.

அதனைக் கண்டு தடுக்க முயன்ற 59 வயதான கடை உரிமையாளரின் வலது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்நபர் எதையும் எடுத்துச் செல்லாமல், மற்றொருவர் ஓட்டி வந்த வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் இன்று அதிகாலை 12.20 மணியளவில் Straits Quay பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அவ்விருவரையும் கைது செய்தனர். இவ்வேளையில் சம்பவத்தில் காயமடைந்த கடை உரிமையாளர் சிகிச்சைக்குப் பின்னர் தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!