Latestமலேசியா

GIC–UGM ஒத்துழைப்பு: மலேசிய மாணவர்களுக்கு விரியும் அனைத்துலகக் கல்வி வாய்ப்புகள்

கோலாலம்பூர், அக்.06–GIC எனும் கூன் இன்டர்நேஷனல் கல்லூரியும் UGM எனும் இந்தோனேசியாவின் காட்ஜா மாடா பல்கலைக்கழகமும் இணைந்து, மலேசிய மாணவர்கள் இந்தோனேசியாவில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் தங்களது மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

2027ஆம் ஆண்டுக்கான UGMமின் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், மலேசிய மாணவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை மற்றும் கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் GIC-யில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்த ஒத்துழைப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன. மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல் மற்றும் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் படிப்பதற்கான வாய்ப்புகளும் இதில் அடங்கும்.

இந்தோனேசியாவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் GIC மூலம் விண்ணப்பித்து தேவையான வழிகாட்டுதலைப் பெறலாம் என GIC இயக்குநர் பிரபாகரன் பெருமாள் தெரிவித்தார். மேலும், 2027ஆம் ஆண்டுக்கான GIC அறக்கட்டளைத் திட்டத்தில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே GICயுடன் 2025ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் UGM முதல்வரும் பேராசிரியருமான Teguh Budipitojo தெரிவித்தார்.

தற்போது சில மலேசிய மாணவர்கள் UGM-ன் கால்நடை மருத்துவப் பீடத்தில் பயின்று வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்கள் சர்வதேச இளங்கலைத் திட்டம் மூலம் UGM-க்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஒத்துழைப்பு மாணவர் பரிமாற்றம், மாணவர் நடவடிக்கைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான புதிய ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியா–மலேசியா இடையிலான கல்வி உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய பாலமாக இந்தக் கூட்டுறவு அமையும் என கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் கல்வி இணைப்பாளர் R. Ahmad Romadhoni Surya Putra குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் Goon International College மூலம் விண்ணப்பிக்கலாம். Diploma, Degree, Enforcement, Early Childhood, IT உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் தொடர்பாகக் கல்லூரியைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெறலாம்.

மாணவர்கள் www.goon.edu.my இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், பல் மருத்துவம் தொடர்பான தகவல்களுக்கு 014-233 6698 என்ற எண்ணில் திரு. அகிலனைத் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!