
குவாலா கிராய், அக்டோபர் 6 – அண்டை வீட்டைச் சேர்ந்த 26 வயது பெண் குளிப்பதை எட்டிப் பார்த்ததை ஒப்புக்கொண்ட 36 வயது ஆடவனுக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றவாளி மீது, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி காலை 11.30 மணியளவில் ஜாலான் ஹலிமா குச்சில் (Jalan Halimah Guchil) பகுதியிலுள்ள வீட்டில் பெண் குளிப்பதை எட்டிப் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக ஆடவனுக்கு, அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பொதுநலன் கருதி தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென துணை அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.



