Latestமலேசியா

மலேசியாவிலிருந்து வந்த தனியார் விமானத்தில் 521 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்

கோளாலம்பூர், அக்டோபர் 6 – மலேசியாவிலிருந்து லாவோஸ் வந்த தனியார் விமானத்தில் 521 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை லாவோஸ் போலீசார் பறிமுதல் செய்து, 13 பேரை கைது செய்தனர்.

அக்டோபர் 1ஆம் தேதி லுவாங் பிரபாங் சர்வதேச விமான நிலையத்தில் (Luang Prabang International Airport) நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 23 பயணப் பெட்டிகள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில் 21 பெட்டிகளில் 500 பொட்டலங்களாக மெத்தாம்பெட்டமைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போதைப்பொருளுடன் தனியார் லியர்ஜெட் (Learjet) விமானம் மற்றும் ஒரு பிக்கப் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் விமானி, துணை விமானி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, நிறுவன ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அடங்குவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!