Latestஉலகம்

இந்தோனேசியாவில் காட்டுத் தீயிலிருந்து மீட்கப்பட்ட 8 ஓராங் ஊத்தான்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு மாற்றம்

ஜகார்த்தா, அக்டோபர்-12,இந்தோனேசியாவில் கடுமையான காட்டுத் தீயிலிருந்து மீட்கப்பட்ட 8 ஓராங் ஊத்தான் மனிதக் குரங்குகள், பாதுகாப்பான வனப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

போர்னியோ தீவின் மேற்கு களிமந்தான் மாநிலத்தில், காட்டுத் தீ காரணமாக வாழ்விடங்களை இழந்த 3 தாய் மற்றும் குட்டி ஜோடிகளும், இரண்டு இளம் ஆண் ஓராங் ஊத்தான்களும் மீட்கப்பட்டன.

அவை, கடந்த வெள்ளிக்கிழமை 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட Batu Nyambu பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக இந்தோனேசிய வனத்துறை தெரிவித்தது.

உணவு, நீர் மற்றும் இயற்கையான வாழ்விட வசதிகள் இருப்பதால் அந்த வனப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை, காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மொத்தம் 46 ஓராங் ஊத்தான் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

எல் நினோ பருவநிலை மாற்றத்தால் இந்தோனேசியாவில் காட்டுத் தீ மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட புகைமூட்டம், மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் காற்றின் தரத்தைப் பாதித்துள்ளது.

அழிவின் விளிம்பில் உள்ள இந்த மனிதக் குரங்குகளைப் பாதுகாக்க, அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பது அவசியம் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!