Latestமலேசியா

இணைய மோசடி: வெளிநாட்டினர் உட்பட 49 பேர் மீது குற்றச்சாட்டு

கூலிம், அக்- 20-கெடா, கூலிம், Bandar Putraவில் கடந்த வாரம் ஐந்து இடங்களில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் எட்டு பேர் உள்ளூர் ஆண்கள்.

அந்த எட்டு உள்நாட்டு ஆடவர்களும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதனை அடுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

எஞ்சிய 41 பேர் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஏழு பெண்களும் அடங்குவர். அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர். அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அக்டோபர் 9-ஆம் தேதி இரவு 8 மணியளவில், Bandar Putraவில் Jalan Lebuh Bandar 2/3 பகுதியில் உள்ள ஐந்து இடங்களில் கூட்டாக இணைய மோசடியில் ஈடுபட்டதாக அவர்கள் அனைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 417-இன் கீழ் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதனிடையே, சம்பவ இடத்தில் 17 ஆவணமற்ற கள்ளக்குடியேறிகள் தங்க அனுமதித்ததாக எட்டு உள்ளூர் ஆடவர்களில் மூவர் மீது தனியாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர். அவ்வழக்கில் தலா 8,000 ரிங்கிட் பிணை நிர்ணயிக்கப்பட்டதுடன், அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி, Bandar Putra வணிக வளாகத்தில் செயல்பட்ட அழைப்பு மையத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியக் காவல்துறை அதிகாரிகள் போல நடித்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் முறியடிக்கப்பட்டது. அந்நடவடிக்கையின்போது 20 முதல் 43 வயதுக்குட்பட்ட 48 பேர் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில காவல்துறைத் தலைவர் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!