Latest

பந்திங்கில் தாயின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகச் சந்தேகம்; மகன் கைது*

பந்திங், நவம்பர்-14 – சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஒரு வீட்டில், மாது ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

அந்தப் பெண், அவரது சொந்த மகனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் MERS 999 அவசர அழைப்பு மையம் மூலம் இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக, குவாலா லங்காட் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவும் வகையில் உள்ளூர் ஆடவர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது குவாலா லங்காட் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!