Latestமலேசியா

காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்ற மக்ரோன், அன்வார் குழுவினருக்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம்

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்துக்கு அண்மையில் வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளிட்டோர் ஆலய வளாகத்தில் காலணிகள் அணிந்திருந்தது தொடர்பில், மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிற சமயங்களின் மரபுகளுக்கு வழங்கப்படும் அதே மரியாதை இந்து சமய மரபுகளுக்கும் வழங்கப்பட வேண்டும் எனச் சங்கத்தின் தேசியத் தலைவர் கணேசன் தங்கவேலு வலியுறுத்தினார். எந்தப் பதவியில் இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும்போது அங்குள்ள சமய நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

இனி உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஆலயங்களுக்கு வருகை தரும்போது, அங்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதைச் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆலய நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!