Latestமலேசியா

பிரான்ஸ் தலைவர்களின் கோவில் வருகை மலேசியாவின் மத நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் உலகிற்கு பறைசாற்றுகிறது – மஹிமா

கோலாலம்பூர், நவம்பர் 18 – பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron), பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கோலாலம்பூரிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானக் கோவிலுக்குச் சென்றதும், அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன் (Brigitte Macron) பத்துமலைக் கோவிலைப் பார்வையிட்டதும் மலேசியாவின் மத மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கு உலகளாவிய அங்கீகாரமாக அமைந்துள்ளதாக மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் (Datuk N. Sivakumar) தெரிவித்துள்ளார்.

இந்த வருகைகள் மலேசியாவில் நிலவும் மத சுதந்திரம், பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

கனமழையையும் பொருட்படுத்தாமல் பிரிஜிட் மக்ரோன் பத்துமலைக் கோவிலுக்குப் படிகளில் ஏறிச் சென்று பார்வையிட்டது, மலேசியாவின் இந்து சமயப் பாரம்பரியத்தையும் ஆன்மீகச் சுற்றுலா வாய்ப்புகளையும் சர்வதேச அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பிரான்ஸ் தலைவர்களின் வருகையின்போது பல்வேறு இனங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து பணியாற்றியது, இன, மத வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக மலேசியர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் பன்முகத்தன்மையே அதன் பலம் என்றும், ஒற்றுமை என்பது வெறும் முழக்கமாக இல்லாமல் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மூலம் அன்றாட வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!