Latestஉலகம்

தென்கொரியாவில் தேர்வின்போது AI ரகசிய கேமரா பயன்பாடு; மாணவர்களுக்குக் கடுமையான சோதனை

தென்கொரியா, நவம்பர் 17 – தேசியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மோசடி செய்வதைத் தடுக்க, மாணவர்களுக்கான சோதனைகளைத் தீவிரப்படுத்த தென்கொரியா அரசு முடிவு செய்துள்ளது.

கணக்காளர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒருவர், ரகசியக் கேமரா மூலம் வினாக்களைப் படம் எடுத்து, செயற்கை நுண்ணறிவு (AI) செயலிக்கு அனுப்பி விடைகளைப் பெற்றதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாணவர்களின் ஆடைகளிலுள்ள பொத்தான்கள் சிறப்பு கருவிகளால் மூடப்படும். சட்டைக் காலர்கள், கண்ணாடிகள் ஆகியவை சோதிக்கப்படுவதுடன், உலோகக் கண்டறியும் கருவிகளும் பயன்படுத்தப்படும். தேர்வு அறைக்குள் பைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் கூடுதலாக 8,400 தேர்வுக் கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மோசடியில் ஈடுபட்டு பிடிபடுவோருக்கான மறுதேர்வு எழுதும் தடை, ஓராண்டிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

தேர்வின்போது வினாத்தாள்கள் படம் எடுக்கப்பட்டு AI செயலிகளுக்கு அனுப்பப்பட்டதா என்பதைக் கண்டறிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் அரசு நாடவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!