Latestமலேசியா

19 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல்: சிங்கப்பூர் நபர் மீது குற்றச்சாட்டு!

ஈப்போ, நவ19-Sultan Azlan Shah விமான நிலையத்தில் 19.04 கிலோ கஞ்சா வகை போதைப்பொருளைக் கடத்தியதாக Chen long எனும் சிங்கப்பூர் ஆடவர் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி காலை 6.20 மணியளவில், விமான நிலையத்தின் check-in முகப்பில் உள்ள Baggage Machine A பகுதியில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. மாஜிஸ்திரேட் Norizan Riduan முன்னிலையில் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B(1)(a)-ன் கீழ் Chen Long மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் வழங்கப்படலாம்.

அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அடுத்தகட்ட வழக்கு விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!