Latestமலேசியா

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்க உரிமத்தின் கீழ் சுமார் 25,000 கைதிகள் விடுவிப்பு

கூலிம், நவம்பர்-22  – நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இட நெருக்கடியைக் குறைக்கும் நடவடிக்கையாக, உரிமம் பெற்ற கைதிகள் விடுதலைத் திட்டத்தின் (PBSL) கீழ் இவ்வாண்டு இதுவரை சுமார் 25,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

​ஜனவரி முதல் அக்டோபர் வரையில் 24,936 கைதிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

​நேற்றிரவு கெடா, கூலிமில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலுள்ள 41 சிறைச்சாலைகளின் மொத்த கொள்ளளவு 75,000 மட்டுமே என்ற போதிலும், தற்போது சுமார் 93,000 கைதிகள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் PBSL திட்டத்தைத் தவிர்த்து, ​சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைக்கவும், கைதிகளின் மறுவாழ்வை உறுதிச் செய்யவும் அக்டோபர் வரை சுமார் 3,900 பேர் பரோல் முறையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

​அத்துடன், தொழில்துறை கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் தகுதியான கைதிகள் தோட்டங்கள், வாகனக் கழுவும் மையங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

​குறைந்தபட்ச ஊதியத்திற்கும் அதிகமாகப் பெறும் இவர்கள் சமூகத்துடன் ஒன்றிணைய இது உதவுவதோடு, வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதையும் குறைக்கிறது என சைஃபுடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!