Latestமலேசியா

சுங்கை பூலோவில் குரங்கு தாக்கியதில் 6 மாத குழந்தை படுகாயம்

சுங்கை பூலோ, நவம்பர்-24,சிலாங்கூர், சுங்கை பூலோ, பாயா ஜாராஸ் ஹிலிர் பகுதியில் உள்ள வீட்டொன்றில் குரங்கு புகுந்து தாக்கியதில், 6 மாத ஆண் குழந்தை முகத்தில் படுகாயமடைந்துள்ளது.

​ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், Ahmad Ayyash Adyan என்ற அக்குழந்தை வீட்டிலிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதையடுத்து, குழந்தையின் தந்தை உடனடியாக மோட்டார் சைக்கிள் மூலம் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்.

​அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசத்தால் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு புகார் அளித்தும் உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

​இந்நிலையில், பாயா ஜாராஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ Halim Tamuri, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் சிலாங்கூர் கிளை அலுவலகத்திற்கு நேரில் சென்று, இவ்விவகாரத்தில் உடனடியாகத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!