Latestமலேசியா

வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு அதிர்ச்சி; வீட்டைப் புரட்டிப்போட்ட குரங்குகள்!

கோலாலம்பூர், நவம்பர் 26 – வேலை முடிந்து வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்க நினைத்த பெண்ணுக்கு, வீட்டிற்குள் புகுந்த குரங்குகளால் அதிர்ச்சி காத்திருந்தது.

Threads சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்த பதிவின்படி, ஜன்னல் சரியாகப் பூட்டப்படாததால் அதன் வழியாக வீட்டிற்குள் நுழைந்த குரங்குகள், அங்கிருந்த பொருட்களைச் சிதறடித்துப் புரட்டிப்போட்டுள்ளன.

சம்பவத்தில், வளர்ப்புப் பூனை காயமின்றி பாதுகாப்பாக இருந்தது குறித்து அப்பெண் நிம்மதி தெரிவித்தார். இருப்பினும், சம்பவத்திற்கு சற்று முன்புதான் சமையலறைக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கியிருந்ததால், அவை சேதமடைந்தது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்ததுடன், பலரும் தங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பகிர்ந்துகொண்டனர். ஒருவர், புதிதாக வாங்கிய முட்டைகளை குரங்குகள் உடைத்ததுடன், மசாலாப் பொருட்கள் வைத்திருந்த போத்தலையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!