Latestஇந்தியா

திருப்பதி கோயிலுக்கு சென்னை தம்பதி 206 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் காணிக்கை

ஹதராபாத், நவம்பர்-27,திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் 206 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

சமண மதத்தைச் சேர்ந்த வர்தமான் ஜெயின், ராதிகா ஜெயின் தம்பதியினர் மொத்தம் 121 கிலோ கிராம் எடையிலான தங்க நகைகளை வழங்கியுள்ளனர்.

அவற்றில் வைர ஆபரணங்களும் அடங்கும்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினரிடம் அந்த நகைகள் ஒப்படைக்கப்பட்டன.

அத்தம்பதியினரின் ஆழ்ந்த இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் அசாதாரணச் செயல் இது என சந்திரபாபு நாயுடு பாராட்டினார்.

இறைவனின் உந்துதலின் பேரில் அந்தக் காணிக்கையை வழங்கியதாகத் அத்தம்பதியினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

செல்வந்தர்கள் தங்களது செல்வத்தை ஆன்மிகப் பணிகளுக்கும் சமூக நலத்திற்கும் ஏழை மக்களின் உதவிக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!