Latestஉலகம்

Eiffel கோபுரத்தின் அடியில் காலி பிணப்பெட்டிகள்; 3 சந்தேக நபர்கள் கைது

பாரீஸ், ஜூன்-4, பாரீசில், உலகப் புகழ்பெற்ற Eiffel கோபுரத்தின் அடிவாரத்தில் 5 காலி பிணப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டுக் கொடிகள் போர்த்தப்பட்டு, ‘யுக்ரேனைச் சேர்ந்த பிரான்ஸ் இராணுவத்தினர்’ என்ற வாசகம் அவற்றில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த பெட்டிகளுக்குள் gypsum என்னும் ரசாயனம் இருந்துள்ளதாக காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அப்பிணப்பெட்டிகளை வேனில் ஏற்றி வந்த Bulgaria நாட்டு ஆடவரும், ஜெர்மனியின் Berlin-னுக்கு ரயிலில் தப்பிச் செல்ல முயன்ற இருவரும் கைதாகியுள்ளனர்.

அவ்விருவரும் ஜெர்மனி, யுக்ரேய்ன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

30 வயதுக்குக் கீழ்ப்பட்ட அம்மூன்று பேருக்கும், மே மாத மத்தியில் Paris Shoah நினைவகத்தில் கை உருவத்தில் சிவப்பு spray பூசிய ஆடவனுக்கும் தொடர்பு இருந்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து வேண்டுமென்றே வன்முறையைத் தூண்ட முயன்றதன் பேரில் அம்மூவரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்.

Eiffel கோபுரத்தின் அடிவாரத்தில் பிணப்பெட்டிகளை வைத்துச் சென்றது உளவியல் ரீதியான வன்முறை என பிரான்ஸ் சட்டத் துறைக் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!