Latestமலேசியா

KLIA, நீலாயில் காதல் மோசடி கும்பல் முறியடிப்பு; 21 பேர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – வெளிநாட்டவர்களை குறிவைத்து காதல் மோசடி மற்றும் போலிப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை குடிநுழைவுத் துறை முறியடித்து, 21 பேரைக் கைது செய்துள்ளது.

KLIA மற்றும் நெகிரி செம்பிலான், நீலாயில், முடிந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், கும்பலின் 4 முக்கிய மூளைகள் உட்பட சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சோதனையில் 33 கடப்பிதழ்கள், 11 கணினிகள், 40 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 4,800 ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

டெலெக்ராம் (Telegram) மற்றும் புலனத்தின் மூலம் காதல் மோசடி மற்றும் போலிப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட அக்கும்பல், இந்த ஆண்டு தொடக்கம் முதல் செயல்பட்டு வந்ததாகவும், சுமார் 210,000 ரிங்கிட் வரை லாபம் ஈட்டியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!