
குவாந்தான், ஆகஸ்ட்-17-LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலை வாகனமோட்டிகளிடமிருந்து சுமார் 14 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு ரோந்துப் பிரிவு அதிகாரியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அவ்விருவரும் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை இத்தொகையைக் கையூட்டாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இப்பணம் இணைய வங்கிப் பரிவர்த்தனை மூலம் மூன்றாம் நபரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கான்ஸ்டபிள் 5 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில், ரோந்து அதிகாரியின் தடுப்புக் காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து 2009 MACC சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக பகாங் MACC கிளை உறுதிப்படுத்தியது.



