Latestமலேசியா

கோலாலம்பூரில் LRT ரயிலில் 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 43 வயது வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 8.30 மணியளவில் Wangsa Maju-விலிருந்து Pasar Seni நோக்கிச் சென்ற LRT ரயிலில், Setiawangsa நிலையத்தை கடக்கும்போது அந்த ஆடவர் தனது அந்தரங்க உறுப்பை பெண்ணின் பின்புறத்தில் உரசியதாக புகார் அளிக்கப்பட்டது.

அவர் ஆகஸ்ட் 21ஆம் தேதி Pasar Seni நிலையத்தில் Prasarana துணைப் பாதுகாப்புப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்காக ஆகஸ்ட் 22 முதல் 25ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!