Latestமலேசியா

MEX நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனமோட்டிய இராணுவ வீரர்; வங்காளதேச சுற்றுலாத் தம்பதியின் வாழ்வில் சோகம்

கோலாலம்பூர், ஏப்ரல்-24-மலேசியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு வங்காளதேச தம்பதியின் விடுமுறை பயணம், ஓர் இராணுவ வீரரான குடிபோதை ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் பெரும் சோகமாக முடிந்துள்ளது.

நேற்று அதிகாலை 5.38 மணியளவில் MEX நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 22 வயது வங்காளதேச இளைஞர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடன் பயணித்த அவரது 20 வயது மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி, தனது Ford Fiesta காரை எதிர் திசையில் ஓட்டிச் சென்று, அத்தம்பதி பயணித்த Perodua Alza e-hailing வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக KLIA விமான நிலையத்திலிருந்து அந்த வெளிநாட்டுத் தம்பதி கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

வாகனத்தை ஓட்டி வந்த 41 வயது e-hailing ஓட்டுநரும் காயமடைந்துள்ளார்.

​விபத்தை ஏற்படுத்திய 31 வயது இராணுவ அதிகாரியைப் பரிசோதித்ததில், அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மது அருந்தியது உறுதிச் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனமோட்டுவதால் அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!