Latestமலேசியா

MIEDயின் RM15 மில்லியன் கல்வி உதவி நிதி; விரைவில் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

புத்ராஜெயா, ஏப்ரல் 27 – இந்திய சமூகத்தின் எல்லா நிலை மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பினை வழங்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டுச் செயல்படும் எம்.ஐ.இடி, அந்த இலக்கில் ஒவ்வொரு வருடமும் முன்னோக்கி பயணிப்பதாக ம.இ.கா-வின் தேசியத் தலைவரும் எம்.ஐ.இடி-யின் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளமும் நிதி உதவியும் வழங்கி வரும் எம்.ஐ.இடி இந்த வருடம் 15 மில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கிய நிதி உதவியை பல்வேறு துறைகளில் பல்வேறு பலகலைக்கழகங்களில் படிக்கும் 671 மாணவர்களுக்கு வழங்கியது.

இந்நிலையில், எம்.ஐ.இடி-க்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக கிள்ளான் பள்ளத்தாக்கில் அதன் கிளை வளாகத்தை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், அதன் தொடர்பாக பிரதமரை நேரில் வந்து சந்திக்கவிருப்பதாகவும் நேற்றைய நிகழ்வில் உரையாற்றையபோது டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கெடாவுக்கு அடுத்து கிள்ளான் பள்ளத்தாக்கிலும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகம் வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு ஏற்ப இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியச் சமுதாயம் கல்வியில் உயர்வதற்காக மறைந்த ம.இ.கா தேசியத் தலைவர் துன் சாமிவேலு அவர்களின் மகத்தான திட்டங்கள்தான் எம்.ஐ.இடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், Tafe கல்லூரி ஆகிய மிகப் பெரிய சொத்துக்கள் .
இதில் குறிப்பாக எம்.ஐ.இடியின் வாயிலாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளில் ம.இ.கா உறுப்பினர்களின் பிள்ளைகளுக்குத்தான் என்றில்லாமல் எந்தவொரு பாகுபாடின்றி மலாய், சீனர், இந்தியர், சீக்கியர் மற்றும் இதர இனத்தவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இன்றைய காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டது எம்.ஐ.இடியின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நேற்று RM 15 மில்லியனுக்கு மேல் வழங்கப்பட்ட எம்.ஐ.இடி கல்வி நிதியும் கடனுதவியும் பெற்ற மாணவர்களும் பெற்றோர்களும் அவர்களின் நெகிழ்ச்சியான தருணங்களை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

புத்ராஜெயாவில் எம்.ஐ.டி கல்வி நிதி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அப்ராஹிம் இந்தியச் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு திட்டங்களை வகுத்து சென்ற மறைந்த துன் சாமிவேலு அவர்களுக்கு நன்றி மாலைகளை தொடுத்தார்.
மாணவர்களுக்கு மாதிரி காசோலைகள் எடுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்வில், உயர்க்கல்வி அமைச்சர் சம்ரி அப்துல் காடிர், ம.இ.கா துணைத்லைவர் டத்தோ ஶ்ரீ சரவணன், தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன், பிரமுகர்கள் என ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!