Latestமலேசியா

‘Tabung Kasih@HAWANA X TM’ திட்டத்தின் கீழ் மக்கள் ஓசை நாளிதழின் மூத்த ஆசிரியர் ராஜனுக்கு நிதியுதவி

கோலாலம்பூர், அக்.08 –‘மக்கள் ஓசை’ நாளிதழின் மூத்த ஆசிரியர் ராஜன் பூபாலனுக்குTabung Kasih@HAWANA X TM’ திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் செலாயாங் மருத்துவமனையில் அவரை நேரடியாகச் சந்தித்து அந்த உதவியை வழங்கினார்.

கடந்த மாதம் கழிவறையில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்காக ராஜன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் ஊடகத் துறையில் 45 ஆண்டுகளாக அவர் ஆற்றிய சேவை பாராட்டுக்குரியது என தியோ நீ சிங் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு முதல் இதுவரை 859 ஊடகத் துறையினர் ‘Tabung Kasih@HAWANA X TM’ திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 2.52 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் ஊடகத் துறையைச் சேர்ந்த 154 பேருக்கு மொத்தம் 462,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவளிப்பதே அத்திட்டத்தின் நோக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!