Latestமலேசியா

சிலாங்கூரில் TNB கேபிள் திருட்டு: 439 சம்பவங்கள், 62.7 மில்லியன் ரிங்கிட் இழப்பு!

ஷா ஆலாம், நவ.19-சிலாங்கூரில் 2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்துக்குச் சொந்தமான கேபிள்கள் திருடப்பட்ட 439 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனால் மொத்தம் 62.7 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டும் 166 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. Cherasசில் 45, Bangiயில் 37, Port Klangங்கில் 24, Bantingங்கில் 12, Rawangங்கில் 10 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுத் தலைவர் Datuk Izham Hashim தெரிவித்தார்.

இவ்வேளையில், மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் கீழ் உள்ள நீரேற்று நிலையங்கள், நீர்க்கதவுகளில் கேபிள்கள் மற்றும் உபகரணங்கள் திருடப்பட்ட 38 சம்பவங்கள் 2023 முதல் 2026 வரை பதிவாகியுள்ளன. அதனால் 1.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிள்ளானில் மட்டும் எட்டு சம்பவங்களில் 667,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோலா லங்காட்டில் 17 சம்பவங்களால் 499,000 ரிங்கிட் இழப்பு பதிவாகியுள்ளது.

மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த Izham, சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களிலும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கேபிள்கள் திருடப்படுவதால், மாதந்தோறும் 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!