
கோலாலம்பூர், நவம்பர் 18 – 2023ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் இதுவரை வேப் பொருட்கள், நிகோட்டின் (nikotin) திரவம் மற்றும் ஜெல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் அரசாங்கம் 377.08 மில்லியன் ரிங்கிட் வருவாயை வசூலித்துள்ளது.
இந்தத் தொகை அனைத்தும் அரசின் ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வசூலிக்கப்பட்ட வரித் தொகையை வேப் தொழில்துறையினருக்குத் திருப்பி வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை.
நிகோட்டின் திரவம் மற்றும் ஜெல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் தாக்கங்களை ஆய்வு செய்து வருவதாகவும், வேப் பொருட்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் கருத்துகளைக் கேட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.



