Latestமலேசியா

பூமிபுத்ரா மக்கள் தொகை இந்த ஆண்டு 21.3 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது

புத்ராஜெயா, டிசம்பர் 19 – இந்த ஆண்டு மலேசியாவில் உள்ள 33.4 மில்லியன் பேர் மக்கள் தொகையில் பூமிபுத்ராக்களின் மக்கள்தொகை 21.3 மில்லியன் அல்லது 63.9 விழுக்காடு என மதிப்பிடப்பட்டுள்ளது. மலேசிய புள்ளிவிவரத்துறை வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான பூமிபுத்ரா புள்ளி விவரங்களில் இத்தகவல் வெளியிடப்பட்டன.

தலைமை புள்ளி விவர நிபுணர் டத்தோஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் இன்று வெளியிட்ட அறிக்கையில், பூமிபுத்ரா ஆண்களின் எண்ணிக்கை 10.8 மில்லியன் பேர்களாகவும், பெண்கள் 10.5 மில்லியன் பேர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பூமிபுத்ரா மக்கள்தொகையின் பாலின விகிதம் ஒவ்வொரு 100 பெண்களுக்கு 102 ஆண்களாகவும் உள்ளது என்று உசிர் மஹிடின் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் உதவி மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்களில் பூமிபுத்ராக்கள் 92.7 விழுக்காட்டினராக உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணத்துவ துறைகளில் பூமிபுத்ராக்கள் 83.8 விழுக்காட்டினர் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே பூமிபுத்ராக்களில் 60.8 விழுக்காட்டினர் நில அளவையாளர்களாகவும் 61.5 விழுக்காட்டினர் தர அளவையாளர்களாகவும், 52.8 விழுக்காட்டினர் பல் மருத்துவர்களாகவும் 52.8 விழுக்காட்டினர் உள்கட்ட வடிவமைப்பாளர்களாகவும் உள்ளனர் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!