Latestவிளையாட்டு

உலகின் சிறந்த ஸ்குவாஸ் வீராங்கனைகள் பட்டியலில் மலேசியாவின் சிவசங்கரியும் இடம் பெற்றுள்ளார்

கோலாலம்பூர், நவ 22 – நாட்டின் முதல் நிலை ஸ்குவாஸ் விளையாட்டாளர் என்ற இடத்தை மீண்டும் பெற்றுள்ள S. சிவசங்கரி தற்போது உலக தர ஸ்குவாஸ் வீராங்கனை பட்டியலில் 22ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கத்தை பெற்றது மற்றும் கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்குவாஸ் போட்டியில் இரண்டாவது சுற்றில் உலகின் ஆறாவது நிலை ஆட்டக்காரரான எகிப்து வீராங்கனை நூர் எல் தாயேபை வீழ்த்தி காலிறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றதன் மூலம் சிவசங்கரி தற்போது சிறந்த அடைவு நிலையை பெற்றுள்ளார். கெடாவைச் சேர்ந்த 22 வயதுடைய சிவசங்கரி அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!