Latestமலேசியா

ஒவ்வோர் இல்லத்திலும் கூட்டுப் பிராத்தனை அவசியம்; சரவணன் வலியுறுத்து

புக்கிட் டாமான்சாரா, பிப்ரவரி-4-இந்துக்கள் இல்லந்தோறும் கூட்டுப் பிராத்தனை நடத்தப்பட வேண்டுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.

“ஆரம்ப காலங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் பரவலாக நடைபெற்றன; ஆனால் பிற்காலத்தில் அது மெல்ல மறைந்ததால், இந்து சமயத்தின் மகத்துவம் பலருக்கு தெரியவில்லை” என்றார் அவர்.

மீண்டும் இந்த கூட்டுப் பிராத்தனை கலாச்சாரத்தைக் கொண்டு வருவதன் மூலம், இந்து மதத்தையும் ஆலயங்களையும் அவமதிப்போரின் கொட்டத்தை அடக்க முடியுமென, அவர் சொன்னார்.

நாம் வாழும் காலத்திலேயே தேவாரம், திருமுறை ஓதினால் தான் வீட்டுக்கும் நமக்கும் நன்மை என, புக்கிட் டாமான்சாராவில் உள்ள தனது இல்லத்தில் நடத்திய கூட்டுப் பிராத்தனைக்குப் பிறகு சரவணன் பேசினார்.

கூட்டுப் பிராத்தனைகள் இல்லங்களில் ஒலிக்க வேண்டும்; மூடநம்பிக்கைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய சரவணன், இந்து அமைப்புகளும் இதனை முன்னெடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, இந்து ஆலயங்களைக் குறி வைத்து, ‘Kuil Haram’ என்ற முத்திரையோடு சில தரப்பினர் புறப்பட்டுள்ளது குறித்தும் சரவணன் வணக்கம் மலேசியாவிடம் கருத்துரைத்தார்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் நடக்காமலிருக்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்தார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டுப் பிராத்தனையில் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!