Latestமலேசியா

தொடக்கப் பள்ளி மாணவன் கைதொலைபேசியில் ஆபாச காட்சியை பார்த்ததைத் தொடர்ந்து கூகுளைச் சந்திக்கிறார் பாமி பாட்சில்

கோலாலம்பூர், டிச 14 – யூடியூப் (YouTube) பில் மாணவர் ஒருவர் ஆபாச காட்சியை பார்த்ததை ஆசிரியர் ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் அடுத்த வாரம் கூகுள் (Google) தேடுபொறி நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். குறிப்பிட்ட வார்த்தை ஒன்றை டைப் செய்தால் ஆபாசப்பட தளத்திற்கு முதல் வகுப்பு மாணவர் செல்ல முடியும் என ஆசிரியர் ஒருவர் சமூக வளைத்தளத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக கூகுள் அதிகாரிகளை சந்திக்கவிருப்பதாக பாமி கூறினார்.

வகுப்பறையில் ஆபாச படத்தை மாணவன் பார்த்துகொண்டிருந்ததை அந்த ஆசிரியர் பார்த்துள்ளார். வகுப்பறையில் பெரும்பாலான பிள்ளைகள் படிக்கவும் எழுத்துக் கூட்டுவதற்குகூட முடியாமல் இருக்கும்போது ஆபாசப் படத்தை மாணவர்கள் பார்ப்பது குறித்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அந்த ஆசிரியர் தெரிவித்தார். MCMC எனப்படும் மலேசிய பல்லூடக ஆணைய அதிகாரிகளுடன் தாமும் கூகுள் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவிருப்பதாக X முகநூலில் பாமி பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!