Latestமலேசியா

புத்ராஜெயா மேனாரா ஸ்ரீ விலாயா ‘cafe’ சமையலறையில் தீ விபத்து

புத்ராஜெயா, செப்டம்பர் 25 – புத்ராஜெயாவிலுள்ள மேனாரா ஸ்ரீ விலாயா கட்டிடத்தில் செயல்படும் கஃபே (cafe) ஒன்றின் சமையலறையில் இன்று காலை தீப்பற்றியது. கட்டிட பராமரிப்பு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே தீயை அணைத்தனர்.

இன்று காலை அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பிரெசின்ட் 7 (Presint 7 ) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு சென்றபோது, தீ கஃபேயின் சமையலறைப் பகுதியில் மட்டுமே ஏற்பட்டிருந்ததுடன், கட்டிடத்தின் கட்டமைப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

கட்டிட பராமரிப்பு குழுவினர் தீயை அணைத்த அதேவேளை, கட்டிடத்தின் தானியங்கி நீர்த் தெளிப்பு அமைப்பும் முறையாகச் செயல்பட்டது. தீயணைப்பு வீரர்கள் புகையை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு, தீ முழுமையாக அணைக்கப்பட்டதை உறுதி செய்தனர்.

காலை 8.16 மணிக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, காலை 10.15 மணிக்கு நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!