Latestமலேசியா

வெளியில் உணவருந்தும் பழக்கம்: மலேசியர்களிடையே அதிகரிக்கும் சுகாதார அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், நவம்பர்-27,வசதிக்காக மலேசியர்கள் அதிகளவில் வெளியில் உணவருந்துவது அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பழக்கம் நாட்டின் சுகாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறி வருவதாகவும், தொற்றா நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக நகர்ப்புற வாழ்க்கை முறையால் எண்ணெய், உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மக்கள் அதிகம் உட்கொள்வதாக மலாயா பல்கலைக்கழகப் பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் Dr சஞ்சய் ராம்பால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 2024 தேசிய சுகாதார மற்றும் நோயுற்ற தன்மை ஆய்வின்படி, வெறும் 3.1 விழுக்காட்டு மலேசியப் பெரியவர்கள் மட்டுமே தினசரி பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதாக புத்ரா பல்கலைக்கழக ஊட்டச்சத்து நிபுணர் பேராசிரியர் Dr Barakatun Nisak சுட்டிக் காட்டியுள்ளார்.

​என்றாலும், வீட்டில் சமைத்து உண்பது, இனிப்பு பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் அருந்துவது, உணவில் அதிக குழம்பு ஊற்றுவதைத் தவிர்ப்பது மற்றும் ‘suku-suku separuh’ உணவு முறையைப் பின்பற்றுவது போன்ற சிறிய மாற்றங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தவிர, MyMeal போன்ற திட்டங்களின் மூலம் ஆரோக்கியமான உணவுகளை மலிவு விலையில் வழங்க உணவகங்களும் முன்வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!