
கோலாலம்பூர், நவ.27-Cheras, Bukit Segar அருகே Sungai Besu-Ulu Kelang விரைவுச்சாலையில் (SUKE) நேற்று மதியம் Rapid KL பேருந்து ஒன்று தீப்பிடித்தது.
Handal Indah Sdn Bhd நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தப் பேருந்து சேவையில் இல்லாத நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக Kepong பணிமனையிலிருந்து Beranangங்கில் உள்ள பணிமனைக்கு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்டது. அப்போது ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பேருந்து தீப்பிடித்ததாக நம்பப்படுவதாக Rapid KL அறிக்கையொன்றில் குறிப்பிட்டது.
சம்பவ இடத்திற்கு சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். பின்னர், பேருந்து கிள்ளானில் உள்ள பணிமனைக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அச்சம்பவத்தில் தொழில்நுட்ப வல்லுநருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், பேருந்தின் நிலை மற்றும் பராமரிப்பு தொடர்பான அம்சங்களை மதிப்பிடுவதற்கு நிறுவனத்தின் உள்விசாரணையும் மேற்கொள்ளப்படும் என்றும் Rapid KL தெரிவித்தது.



