Latestமலேசியா

பிரசானாவைத் தேடும் பணியைக் கைவிடும் காவல்துறை – இந்திரா காந்தி வேதனை

ஈப்போ – பிரசானா டிக்சாவுக்கு 18 வயது நிறைவடைந்ததால், அவரைத் தேடும் நடவடிக்கையைக் காவல்துறை கைவிடுவதாக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக அவரது தாயார் எம். இந்திரா காந்தி கூறினார். அதேவேளையில், தனது முன்னாள் கணவரைத் தேடும் பணி தொடரும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தகவல் தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக இந்திரா காந்தி தெரிவித்தார். பல ஆண்டுகளாக முயன்றும் மகளை நேரில் சந்திக்க முடியாதது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பிரசானா இப்போது எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளவும், அவரை ஒருமுறையாவது நேரில் சந்திக்கவும் விரும்புவதாக இந்திரா காந்தி உருக்கத்துடன் தெரிவித்தார். ஒருநாள் மகளைச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரசானா 11 மாதக் குழந்தையாக இருந்தபோது, தனது முன்னாள் கணவர் அவரை அழைத்துச் சென்றதாக இந்திரா காந்தி கூறினார். மகளைக் கண்டுபிடிக்க முதலில் காவல்துறையின் உதவியை நாடிய அவர், தேடலில் முன்னேற்றம் ஏற்படாததால் பின்னர் நீதிமன்றத்தை நாடினார். ஏறத்தாழ 18 ஆண்டுகளாக மகளை மீண்டும் சந்திக்க அவர் முயன்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!