Latestமலேசியா

கோலாலம்பூரில் 21-ஆவது மாடியிலிருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார்!

கோலாலம்பூர், நவம்பர் 26 – கோலாலம்பூர், பந்தாய் ரியா (Pantai Ria) மக்கள் குடியிருப்புத் திட்டத்தின் (PPR) 100-ஆவது கட்டிடத்தின் 21-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த 29 வயது பெண் உயிர் தப்பினார்.

நேற்று நண்பகல் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அப்பெண்ணின் இடது காலிலும் வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் ஹூ சாங் ஹூக் (Assistant Commissioner Hoo Chang) தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், அப்பெண் செகாம்புட் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் அந்தக் குடியிருப்பில் வசிப்பவர் அல்ல என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், 21-ஆவது மாடியில் அவரது தனிப்பட்ட உடைமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதுடன், சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!