Latestமலேசியா

‘ஸ்டார்பக்ஸ்’ புறக்கணிப்பு; 2023 இரண்டாம் காலாண்டில் RM42.6 மில்லியன் நிகர இழப்பை எதிர்நோக்கியுள்ளது ‘பெர்ஜயா புட்’ நிறுவனம்

கோலாலம்பூர், பிப்ரவரி 22 – ஸ்டார்பக்ஸ் மீதான புறக்கணிப்பு நடவடிக்கைகளால், 2023-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில், Berjaya Food நிறுவனம் நான்கு கோடியே 26 லட்சம் ரிங்கிட் நிகர இழப்பை பதிவுச் செய்துள்ளது.

அது, கடந்தாண்டு அதே காலக்கட்டத்தில் அந்நிறுவனம் பதிவுச் செய்த 29 கோடியே 53 லட்சம் ரிங்கிட் வருவாயைக் காட்டிலும் 38 விழுக்காடு அல்லது 18 கோடியே 25 லட்சம் குறைவாகும்.

கடந்த காலாண்டில் சாதகமற்ற சூழல் நிலவினாலும், இவ்வாண்டு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டின் மீதமுள்ள காலாண்டுகளில், முன்னேற்றம் மற்றும் வேகமான சூழல் காணப்படுமென அந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

மலேசியாவிலும், புருனையிலும் “Starbucks Coffee” பிராண்டை அறிமுகப்படுத்தி இயக்கி வரும் Berjaya Food நிறுவனம், பிரபல Kenny Rogers Roasters உரிம வாணிபத்தியும் வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!