Latestமலேசியா

சீன நிறுவனத்துடன் இலக்கவியல் உள்ளடக்கத்துறையில் உடன்பாடு: மலேசியாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் – கோபிந்த் சிங்

கோலாலம்பூர், மே 16 – இலக்கியவியல் (டிஜிட்டல் ) உள்ளடக்கத்தின் வழி நாடு பன்மடங்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு சீன பெரு நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் மூலம் ஏற்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.

மலேசிய இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகம் மற்றும் சீனா இன்டெர்நேசனல் கேப்பிட்டல் கார்ப்பரேசன் (CICC) இடையே புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டின் மூலம் சீனா கேம்மற்றும் “டிஜிட்டல் உள்ளடக்க நிதி ” என்ற 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதி உருவாக்கப்படவுள்ளது என அவர் கூறினார்.

2011 முதல் 2023 வரை மலேசியாவின் டிஜிட்டல் உள்ளடக்கத்துறையின் மொத்த வருமானம் 87.25 பில்லியன் ரிங்கிட் , ஏற்றுமதி 11.18 பில்லியன் ரிங்கிட் மற்றும் முதலீடுகள் 80.26 பில்லியன் ரிங்கிட் பதிவாகியுள்ளதாக கோபிந்த் சிங் விவரித்தார்.

இந்த இலக்கவியல் உள்ளடக்கத்துறை 2023ஆம் ஆண்டில் 8,200 வேலை வாய்ப்புக்களை உருவாக்கி 300க்கும் மேற்பட்ட இலக்கவியல் உள்ளடக்க நிறுவனங்களை கொண்டுள்ளது.

அதோடு இந்த துறை 2023ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் ரிங்கிட் அளவிலான உள்நாட்டு உள்ளூர் உற்பத்தி மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பை பதிவு செய்துள்ளது.

மலேசியாவின் உள்நாட்டு உள்ளடக்க நிறுவனங்கள், 7th Beat Games (Rhythm Doctor) , Upin ipin, Ejen Ali, Mechamato மற்றும் Didi AND Friends போன்ற உலகளாவிய அளவில் புகழ்பெற்ற படைப்புக்களை உருவாக்கி ,நாட்டின் படைப்பாற்றலை உலகாளவிய நிலையில் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த விழாவில் Excelence in Audio பிரிவில் மலேசியா வெற்றி பெற்றது.

மேலும் மலேசியாவின் Upin ipin, Ejen Ali , Mechamato மற்றும் Didi AND Friends போன்ற மலேசிய அனிமேசன் தொடர்கள் உலகளாவிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பதோடு இந்த வளர்ச்சி டிஜிட்டல் உள்ளடக்கத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான அஸ்திவாரம் என கோபிந்த் சிங் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!