Latestமலேசியா

ஆறு பேர் பயணித்த MPV ரக வாகனம் மீது மரம் விழுந்து சிறுமி காயம்

மலாக்கா, ஆகஸ்ட்-20- மலாக்கா, Bembanனில் Jalan Kolam Air Panas சாலையில் MPV வாகனமொன்றின் மீது மரம் விழுந்து நசுக்கியதில், சிறுமி ஒருவர் காயமடைந்தார். அதேவேளை அவருடன் இருந்த மற்ற ஐவர் காயமின்றித் தப்பினர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நால்வர் சிறார்கள். அந்த அறுவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

நேற்றிரவு அவசர அழைப்பு பெற்று Jasin Bestari தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி Mohd Hafidzatullah Rashid தெரிவித்தார்.

அங்கு சென்றடைந்த தீயணைப்பு வீரர்கள் மரம் விழுந்து வாகனம் நசுக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அதே சமயம் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் வாகனத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியிருந்தனர். பின்னர் வாகனத்தின் மீது விழுந்திருந்த மரம் அகற்றப்பட்டு இரவு 11.01 மணிக்கு மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக அவர் கூறினார்.

இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து தங்களுக்குப் புகார் கிடைத்ததை Jasin மாவட்டக் காவல் துறைத் தலைவர் Lee Robert உறுதிப்படுத்தினார். ஒரு சிறுமி காயமடைந்த நிலையில் மற்ற நால்வர் காயமின்றித் தப்பினர். சுகாதாரப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!