
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – இந்தோனேசியா பாலி கடற்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவானது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia தெரிவித்ததன்படி, இந்த நிலநடுக்கம் 499 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதெனவும் இதன் மையம் தெற்கு 7.2 டிகிரி, கிழக்கு 117.2 டிகிரி பகுதியில் அமைந்திருந்ததெனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் மாத்தாரம் நகரிலிருந்து வடகிழக்கே 194 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் MetMalaysia தெரிவித்துள்ளது.



