Latestமலேசியா

உலகக் கிண்ண சூதாட்டம்; தினமும் 27 மில்லியன் ரிங்கிட் சூதாட்டப் பணத்தைக் கையாண்ட மெகா கும்பல் கைது; 161 பேர் சிக்கினர்

கோலாலம்பூர், ஜூலை-23-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது, நாட்டில் நாளொன்றுக்கு 27 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பந்தயங்களைக் கையாண்ட இணைய சூதாட்டக் கும்பலைப் போலீஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

ஜூலை 16-ஆம் தேதி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் 19 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதில் அக்கும்பல் சிக்கியதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

​Ops Soga XI என்ற நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளில், 55 பெண்கள் மற்றும் 6 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 161 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இந்தச் சூதாட்டக் கும்பலை இயக்கிய முக்கிய நிறுவனத்தின் இயக்குநர்கள் ஐவரும் அடங்குவர்.

​உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காகத் தனியாக ஒரு செயலியை உருவாக்கி இந்தச் சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சோதனையின் போது நூற்றுக்கணக்கான கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

​தொழில்நுட்ப சேவைகள் வழங்குவது போல் நடித்து, சட்டவிரோத சூதாட்டத்தை நடத்தி வந்த இந்தக் கட்டமைப்புக் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!