
ஹைதராபாத், ஜூலை-17-இந்தியா, ஒடிஷாவில் சமய விழாவொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் கடலோர நகரமான பூரியில் நடைபெற்ற ஜெகந்நாத ரத யாத்திரைக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த சமயத்தில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவ்விழாவில் காணப்பட்ட கட்டுக் கடங்காத கூட்டமே அதற்குக் காரணம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பூரியில் உள்ள பிரதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 350-ஐ எட்டியுள்ளதாக உள்நாட்டு அரசியல்வாதி ஒருவர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என அவர் குறிப்பிட்டார்.
அச்சமய விழாவையும் தேரோட்டத்தையும் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரள்கின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல சம்பவங்கள் நிகழ்ந்த வரலாறு உண்டு. கடந்த ஆண்டும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.



