Latestஉலகம்

காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்

கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

மே 15ஆம் தேதியன்று இந்த நோயின் பரவல் அதிகரிக்கப்பட்டது முதல் இதுவரை 254 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு மொத்தம் 1,003 பேர் இந்நோயின் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நோய் பரவல் அதிகரித்த போதிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள் தீவிர விசாரணை, நோய்த்தொற்று பரவல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுரி (Ituri), வட கிவு (North Kivu) மற்றும் தென் கிவு (South Kivu) ஆகிய மாநிலங்களில் வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ரோஜர் கம்பா (Roger Kamba) தெரிவித்தார்.

இதனிடையே அங்கு நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்கும் விகிதம் குறைந்துள்ளது.

குறைந்தது 100 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 365 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போதைய பரவல் மோசமடையக்கூடும் என்று ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது.

குறிப்பாக, நோய்த்தொற்று பரவல் மிக விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால் இந்த ஆபத்து ஏற்படலாம் என்று அது சுட்டிக்காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!