
புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 17 – புக்கிட் மெர்தாஜாமில் செயல்பட்ட ஆன்லைன் “Love Scam” அதாவது காதல் மோசடி கும்பலில் தொடர்புடைய ஐந்து சீன நாட்டவர்களும், ஒரு தைவான் நாட்டவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் மூலம் தங்களது சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களை காதல் வலையில் சிக்கவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறு பேருக்கும் தலா 9,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு, செபராங் பிறை தெங்காவில் உள்ள புக்கிட் மீஞாக் (Bukit Minyak, Seberang Perai Tengah) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.



