Latestமலேசியா

குவாலா திரங்கானுவில் 13-ஆவது மாடியில் இருந்து விழுந்த “ஆட்டிசம் குறைப்பாடு” சிறுமி பலி

குவாலா திரங்கானு. ஜூலை-25-குவாலா திரங்கானுவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை 7 மணிக்கு, அக்குடியிருப்பின் கீழ் தளத்தில் வாகன நிறுத்துமிடத்தில் சிறுமி மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடம் விரைந்த போலீஸார், பலத்த காயமடைந்த அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

சிறுமியின் பெற்றோர் கிளந்தான் பாசீர் பூத்தேவில் இருந்து வந்து, குவாலா திரங்கானுவில் வாடகைக்குத் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இத்துயரச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!