Latest

கெடாவில் தாத்தா ஓட்டிய லாரி மோதி 2 வயது சிறுமி பலி

குருன், ஜூலை-23-கெடா, Kampung Bukit Kuang பகுதியில் தமது தாத்தா ஓட்டிய லாரி மோதி இரண்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அச்சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

61 வயதான முதியவர் லாரியைப் பின்னோக்கிச் செலுத்தும் போது பேத்தியின் மீது மோதியதை அறியாததால் அவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கெடா மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Adzli Abu Shah தெரிவித்தார்.

அச்சம்பவம் தொடர்பில் காவல் துறை இரண்டு விசாரணைக் கோப்புகளைத் திறந்துள்ளது. 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் ஆகியற்றின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!