Latestமலேசியா

சாலையில் டயரை மாற்றிய ஆடவர் வாகனம் மோதி மரணம்

கோலாலம்பூர், ஜூலை-7-Cheras-Kajang நெடுஞ்சாலையின் 13-வது கிலோமீட்டரில் வாகனத்தால் மோதப்பட்ட ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சம்பவம் நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் நிகழ்ந்தது.

வெள்ளி நிற Toyota Innova காரில் ஐந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்நபர், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி காற்று வெளியேறி விட்ட டயரை மாற்றியுள்ளார்.

பிறகு எச்சரிக்கைச் சின்னமாக வைக்கப்பட்டிருந்த வாளியை அகற்றுவதற்காக பின்புறம் சென்ற போது, ஒரு சிவப்பு நிற Toyota Innova கார் அவரை மோதியது.

அக்காரை ஓட்டியவர் அதனை நிறுத்தாமல் உடனடியாக சென்று விட்டதாக Kajang மாவட்ட காவல் துறைத் தலைவர் ACP Naazron Abdul Yusof தெரிவித்தார். அதே சமயம் மோதப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டதாக அவர் அறிக்கையொன்றில் கூறினார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் 012-3268496 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!