
சிலாங்கூர், செப்டம்பர் 11 – சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah) ஆட்சியின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதற்குப் பதிலாக அக்டோபர் 26, திங்கட்கிழமை மாற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விழாவை முன்னிட்டு செப்டம்பர் 28 முதல் நவம்பர் 1 வரை 20 அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் 21 குண்டுகள் முழங்கும் மரியாதை அணிவகுப்பு, பட்டங்கள் வழங்கும் விழா, மாநில விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சமய நிகழ்ச்சிகள், சமூக நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.



