Latestமலேசியா

சுங்கை பூலோவில் திடீர் வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உதவினார் டத்தோ ரமணன்

சுங்கை பூலோ, ஏப்ரல்-17, சிலாங்கூரில் நேற்று பெய்த கனமழையில் சுங்கை பூலோவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மாலை 5 மணி தொடங்கி விடாமல் மழை பெய்ததால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன உடனடியாக வருகை மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார்.

குறிப்பாக Kampung Melayu Subang மற்றும் Kampung Kubu Gajah-வில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நலம் விசாரித்தார்.

அதோடு, JKM, NADMA, போலீஸ் மற்றும் இதர அரசு நிறுவனங்களைக் கைப்பேசியில் தொடர்புக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவிட ஆவன செய்தார்.

தற்போது வரை, Merbau Sempak தேசியப் பள்ளியில் தற்காலிக நிவாரண மையம் (PPS) திறக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையமும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை விரைந்து வழங்கும்.

இந்த இக்கட்டானச் சூழலில் அவ்வுதவி அவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என தொழில் முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சருமான டத்தோ ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்திய ரமணன், சுங்கை பூலோ நாடாளுமன்றச் சேவை மையக் குழுவும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

நேற்றைய மழையால் சுங்கை பூலோவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, சாலைகளிலும் போக்குவரத்து நிலைக்குத்தியக் காட்சிகளை, வைரலான காணொலிகளில் காண முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!