Latestமலேசியா

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு; மரணச் சான்றிதழ், இழப்பீட்டைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பம்

கோலாலம்பூர், பிப்ரவரி-27-2024 ஆகஸ்டில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன இந்தியப் பிரஜை வி. விஜயலெட்சுமியின் குடும்பம், அவரது மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

மரணச் சான்றிதழ் இல்லாமல் இழப்பீடு கோர முடியாது எனக் கூறிய அவர்களின் வழக்கறிஞர் எம். பார்திபன், அக்குடும்பம் இந்தியாவில் நிதி சிக்கலைச் சமாளிக்க முடியாமல் தவிப்பதாக சொன்னார்.

விஜயலெட்சுமியின் மகன் எம். சூர்யா, கிள்ளானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வழக்கறிஞர்களுடன் கலந்து கொண்டு அதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

2 ஆண்டுகள் ஆகியும் விஜயலெட்சுமி இன்னும் “காணாமல் போனவர்” என அதிகாரப்பூர்வமாக பதிவாக இருப்பது குடும்பத்திற்கு பெரும் வேதனையாக உள்ளது.

அவர்கள், உணர்ச்சியிலும் சட்ட ரீதியிலும் முடிவுக்கு வர அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிர்கள் வலியுறுத்தினர்.

நாட்டையே உலுக்கிய அச்சம்பவத்தில் 48 வயது விஜயலெட்சுமி நில அமிழ்வில் சிக்கி காணாமல் போனார்; 9 நாட்கள் தீவிர தேடலுக்குப் பிறகு அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

பின்னர், அக்குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் பரிந்துரை பரிலீசிக்கப்படுமென அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதன் பிறகு இதுவரை எந்த தகவலும் இல்லை என சூர்யா தெரிவித்தார்.

இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டமில்லை; ஆனால் இணக்கமான முடிவு எட்டப்படாத பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கக் கூடுமென அவர் சொன்னார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!