Latestமலேசியா

ஜோகூரில் கேபிள் திருட்டு முயற்சி; துணை போலீசைக் கண்டதும் கேபிளை காரில் இழுத்தபடி தப்பிய நால்வர்!

ஜோகூர், ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாருவிலுள்ள பண்டார் டத்தோ ஓன் பகுதியில் கேபிள்களைத் திருட முயன்ற நான்கு பேர், துணை போலீஸ் அதிகாரியைக் கண்டவுடன் காரில் தப்பியோடியுள்ளனர்.

நேற்று காலை 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், காரின் பின்புறத்திலிருந்து கேபிளின் ஒரு பகுதி இழுத்துச் செல்லப்பட்டது. சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

நான்கு சந்தேக நபர்களும் உள்ளூர் மக்களாக இருக்கலாம் எனக் கூறிய போலீசார், அவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!