Latestமலேசியா

ஜோகூரில் வெறி கொண்டு ஓடிவந்த எருமை மாடு முட்டித் தள்ளியதில் 50 வயது நபர் பரிதாப மரணம்

உலு திராம், மே-28 – ஜோகூர், உலு திராமில் ஹஜ் பெருநாள் குர்பானுக்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடு ஒன்று, திடீரென திமிறி வெறிகொண்டு ஓடியதோடு, ஓர் ஆடவரை முட்டிக் கொன்ற சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்புப் பகுதி ஒன்றில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த அந்நபர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த போதும், கடும் வலியில் எழுந்து நிற்க அவர் மல்லுக் கட்டினார்.

எனினும், பின்னர் அவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.

இது குறித்து முழு போலீஸ் அறிக்கை வெளியிடப்படுமென, ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸார் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!